யாழ். ஊர்காவற்றுறை சென் அந்தோனியார் கல்லூரியின் 140 ஆண்டு நிறைவை முன்னிட்டு கனடாவில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகள்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சென் அந்தோனியார் கல்லூரியின் 140 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அதன் பழைய மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகள் கனடாவில் இடம்பெற்றன.

ரொறன்ரோ பிராந்தியத்தில் உள்ள ஜே.ஜே சுவாகற் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (08/12/2012)அன்று மாலை 7 மணியளவில் நூல் வெளியீடும், கலை நிகழ்வுகளும் நடந்தேறின.

பழைய மாணவர் சங்கத் தலைவரான திரு தோமஸ் இரட்ணசாமி தலைமையில் மாணவிகளின் பரத நாட்டியத்துடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமெரிக்காவிலிருந்து ஜோஜ் புள்ளநாயகம், இலங்கையில் இருந்து பாதிரியார் ஜேம்ஸ் சிங்கராஜர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் முன்னுரைகளை ஆற்றினார்கள்.

தொடர்ந்து பாடசாலையின் 140 ஆவது நிறைவை ஒட்டி நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதன் முதற் பிரதியை ஜேம்ஸ் சிங்கராஜர் அவர்கள் ஜோஜ் புள்ளநாயகத்திடம் கையளித்தார்.

குறித்த மலரில் போப்பாண்டவர், கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன், கனடாவின் நகரசபை உறுப்பினரான லோகன் கணபதி மற்றும் கல்லூரியின் பழைய மாணவர்களும் தங்களது வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்திருந்தார்கள்.

தொடர்ச்சியாக நிகழ்வுக்கு வந்திருந்த பார்வையாளர்களின் கண்களுக்கு நடனங்களும், பாடல்களும் விருந்தளித்தன.

இராப்போசனம் மற்றும் அதிஷ்டலாபச் சீட்டிழுப்புக்களுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.

குறித்த நிகழ்வின் போது தமிழ் சி.என்.என் இனது விசேட செய்தியாளர் சிறி ராஜன் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் வருமாறு,