இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் எடுக்க வேண்டும்!

சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை அடுத்து இலங்கை மீதான கண்டனங்களும் கனடிய மண்ணில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.

இலங்கையில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது மிகுந்த கரிசனையளிப்பதாக கனடாவின் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பரித்தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான பற்றிக் பிரவுன் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து கிச்சனர் மத்தி ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் வுட்வேர்த்தும் தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளார்.