அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கறுப்பின வாலிபர்கள் இன வெறி காரணமாக வெள்ளைக்கார போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வப்போது நடைபெறும் தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சாண்டியாகோ நகர் பகுதியில் இரவு 11 மணியளவில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர் போலீசார் மீது சரமாரியாக சுட்டான். அதில் போலீஸ் அதிகாரி ஒருவர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.

மற்றொரு அதிகாரி படுகாயம் அடைந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகவலை சாண்டியாகோ போலீஸ் தலைமை அதிகாரி ஷெல்லி ஷிமெர் மேன் தெரிவித்தார்.

இதற்கிடையே போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற நபர் யார்? கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான உருவத்தை வைத்து வீடு வீடாக சென்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ss