றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பிரேசிலுக்கு செல்லும் 313 கனேடிய வீரர்கள்

றியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக கனடாவில் இருந்து 313 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்றும், அவர்கள் 37 விளையாட்டுக்களில் பங்பற்றவுள்ளனர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரேசிலின் றியோ டீ ஜெனிரோவில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளி்ல் கலர்ந்து கொள்வதற்காக இந்த வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை கனேடிய ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ளது.

313 கனேடிய விளையாட்டு வீரர்களுடன், அவர்களுக்கான 98 பயிற்சியாளர்களும், 107 உதவி அலுவலர்களும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றியோ செல்லும் கனடாவின் விளையாட்டு வீரர்கள் குழுவில் 126 வீரர்களும், 187 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதாகவும், அனைவரும் 16 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அது தகவல் வெளியிட்டுள்ளது.

அதிகளவான வீரர்கள் ஒன்ராறியோவில் இருந்தே கலந்துகொள்வதாகவும், குறிப்பாக ஒன்ராறியோவில் இருந்து 132 வீரர்களும், அதற்கு அடுத்த படியாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் இருந்து 68 வீரர்களும், அடுத்து கியூபெக்கில் இருந்து 54 வீரர்களும் கலந்துகொள்வதாகவும் அது விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை பெண்களுக்கான படகு போட்டியில் கலந்துகொள்ளும் லெஸ்லி தோம்சன் எட்டாவது தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

56 வயதான லெஸ்லி தோம்சன் என்பவரே, கனடாவில் இருந்து றியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களில் கூடிய வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trampolinist Rosie MacLennan is surrounded by children while waving the Canadian flag after being named Canada's flag-bearer for the opening ceremony of the 2016 Rio Olympics, following a ceremony on Parliament Hill in Ottawa, Ontario, Canada, July 21, 2016. REUTERS/Chris Wattie     TPX IMAGES OF THE DAY

Trampolinist Rosie MacLennan is surrounded by children while waving the Canadian flag after being named Canada’s flag-bearer for the opening ceremony of the 2016 Rio Olympics, following a ceremony on Parliament Hill in Ottawa, Ontario, Canada, July 21, 2016. REUTERS/Chris Wattie TPX IMAGES OF THE DAY