ஹிலாரி ஒரு சாத்தான் என்கிறார் டிரம்ப்

அமெரிக்க குடியரசு கட்சியின் சார்பில் தேர்தல் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனை “சாத்தான்” எனக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பென்சில்வேனியாவில் நடந்த பேரணி ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட கட்சியின் நியமனம் பெறும் போட்டியில், ஹிலரியிடம் பெர்னி சாண்டர்ஸ் பணிந்துவிட்டார் என்றும் சாடியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய டிரம்ப், பெர்னி சாண்டர்ஸ் ஓர் சாத்தானுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். ஹிலரி தான் அந்த “சாத்தான்” என சாடியுள்ளார்.

குடியரசு கட்சியின் சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளரான ஜான் மெக்கெயினும் குறித்த கருத்து தொடர்பில் டொனால்ட் டிரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக டொனால்ட் டிரம்ப் தனது சொந்தக் கட்சியினரிடமிருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.