இலங்கைத் தமிழர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது.

இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

லிங்கநாதன் மகேந்திரராஜா என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன.

மகேந்திராஜா கடந்த 1990ம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.