சிங்கார வேலனே தேவா பாடலை வித்தியாசமாகப் பாடி அசத்திய சத்தியப்பிரகாஷ் (Video)

சுப்பர் சிங்கர் 3 புகழ் சத்தியப்பிரகாஷ் (பின்னணிப் பாடகர், BE Mechanical engineering) அவர்கள் தனது 8 வயதில் இருந்தே தனது இசைப்பயணத்தை தொடங்கி சுப்பர் சிங்கர் மேடையை பழைய புதிய பாடல்களைப் பாடி தனது திறமையால் அதிரவும், அழவும், பெருமைப் படவும் வைத்தார்.

இவர் பற்பல திறமையான இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் இன்னும் பாடிக்கொண்டும் இருக்கின்றார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா, வித்தியாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஜீவி பிராகாஸ், அனிருத் ரவிச்சந்தர், டி. இமான் (இளையவர்களையும் திறமையாளர்களையும் தட்டிக்கொடுக்கும் இனிய மனிதர்)
சந்தோஷ் நாராயணன், சாண் றொல்டன், கண்ணன், விஜய் எபனீசர், சைமன், ஜஸ்ரின் பிரபாகரன், NR ரகுநானந்தன் இவர்களுடனும் இன்னும் பலஇசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வருகின்றார்.

இவர் “Kalaprathibha award, Young achiever award, Voice of the world award, and Youth excellence award, எனப் பல விருதுகளும் பெற்றிருக்கின்றார், அத்துடன் “The Vijay Tele Award” “அம்மாடி உன் அழகு என்ற பாடலுக்கும்” “MGR – Shivaji academy award” “ஆனாலும் இந்த மயக்கம்” என்ற பாடலுக்கும் விருதுகளைப் பெற்றார்.

Youtube இல் பதியப்பட்டிருக்கும் சிங்காரவேலனே தேவா என்ற பாடலைப் பாடி அவரே பல இசைக் கருவிகளையும் இசைத்து மிகவும் அருமையாகப் பாடி நம்மை மிகவும் மகிழ்வித்திருக்கின்றார்.

கீழே பதியப் பட்டிருக்கும் பதிவை கேட்டு மகிழுங்கள்.

திறமையும் ஆற்றலும் உள்ளவர்களை நாம் தட்டிக் கொடுத்து வளர்த்து விடுவது நமது கடமை.

சிறிய வயதில் இப்படிப் பல வெற்றிகளையும் பல விருதுகளையும் பெற்ற சத்தியப்பிரகாஷ் டர்மர் இன்னும் பல சிகரங்களையும் பற்பல வெற்றிகளையும் அடைய தமிழ் சி.என்.என் குடும்பம் மனமார வாழ்த்துகின்றது.

தகவல்: சுகந்தி ராஜன்

IMG_3704

IMG_3706

IMG_3707