அமெரிக்கா சுற்றுலாத்தளத்தில் போக்கிமோன் கேம் விளையாடிய வாலிபர் சுட்டுக்கொலை

கடந்த மாதம் வெளியிடப்பட்ட போக்கிமோன் கோ கேம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த விளையாட்டு கவனக்குறைவை விளைவித்து விபத்தை ஏற்படுத்துவதாக 15-க்கும் அதிகமான நாடுகள் இதனை தடை செய்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் அருகில் சுற்றுலாத்தளமொன்றில் போக்கிமோன் கோ விளையாடிய இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் கால்வின் ரிலே (20). இவர் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கடற்கரையோரம் நடந்துகொண்டே போக்கிமோன் கேம் விளையாடியோது அவர் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொலைக்கான காரணம் குறித்த முழு தகவல்கள் வெளியாகிவில்லை. கொலையை நேரில் பார்த்தவர்களிடம் சான்பிரான்சிஸ்கோ நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

poo