உலகின் முதன்முறையாக மூன்றே நிமிடங்களில் பீட்ஸா வழங்கும் ATM இயந்திரம் (Video)

இதுவரை பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். எந்திரங்கள் முதன்முறையாக சூடான பீட்சா விற்பனைக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள சேவியர் பல்கலைக்கழகம் இந்த பீட்சா ஏ.டி.எம்.மை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த ஏ.டி.எம்.மின் தொடுதிரையில் நமக்குத் தேவையான பீட்சாவை தேர்வு செய்தபின் அது தயாராகி ஓவனுக்கு சென்றுவிடும். சரியாக 3 நிமிடங்களில் நாம் தேர்ந்தெடுத்த பீட்சா துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட நிலையில் அட்டைப் பெட்டிக்குள் வைத்து வெளியே தள்ளப்பட்டு, நமது கைக்கு வந்துவிடும்.

இந்த பீட்சா இயந்திரம் நாளை முதல் (ஆகஸ்ட் 10) பயன்பாட்டுக்கு வருகிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் இந்த ஏ.டி.எம். வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பீட்சாவின் விலை 10 அமெரிக்க டாலர்கள். டெபிட், கிரெடிட் மற்றும் ஸ்டூடண்ட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த பீட்சாவை வாங்கமுடியும்.