சவுதிக்கு பெருந்தொகை ஆயுதங்களை அள்ளி வழங்கிய அமெரிக்கா

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா இருந்து வருகிறது. இந்த நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியா ஏமன் நாட்டில் அரசுக்கு எதிரான புரட்சி படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தயங்கி வந்தது.

ஆனால், இப்போது ரூ.7 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 153 போர் டாங்கிகள், அதி நவீன எந்திர துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் சவுதி அரேபியாவுக்கு விற்கப்பட உள்ளன.

நேற்று அமெரிக்கா ஆயுதம் விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சவுதி அரேபியா ஏமன் நாட்டில் மீண்டும் விமான தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

201608111309179294_US--approves-1-15-billion-dollars-sale-of-tanks-equipment-to_SECVPF