அமெரிக்க கொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் சீக்கியர் பலி

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் மெட்ரோ பகுதியில் வசித்து வருபவர், அமன்ஜீத் சிங் தூர்(36). சீக்கியரான இவர், அரிசோனாவில் உள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்தபடி தனது குடும்பத்துடன் இதேபகுதியில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், அமன்ஜீத் பணியாற்றிவந்த கடைக்குள் கடந்த திங்கள்கிழமையன்று புகுந்த முகமூடி கொள்ளையன் அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு அமன்ஜீத் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான். பலத்த காயமடைந்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திவரும் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

அமன்ஜீத் சிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அந்த குற்றவாளியை பிடித்து அவனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.