ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரைக் கொன்ற அமெரிக்கா

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக பல நாடுகள் யுத்தங்களை நடத்தி வருகின்றன. ஆசியப் பகுதியில் குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கான் , இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பை காலூன்றச் செய்வதற்காக முயற்சிகளை ஐ.எஸ் எடுத்து வரும் நிலையில் ஹபீஸ் சயீத் என்ற ஐ.எஸ் தலைவரை அமெரிக்கா பாகிஸ்தான் எல்லையில் நடத்திய தாக்குதலில் கொன்றுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரும் ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ் அமைப்பின் கிளையின் தலைவருமாக செயல்பட்டு வந்த ஹபீஸ் சயீத் கான் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஆப்கான் -பாகிஸ்தான் எல்லைப்பிராந்திய பகுதியில் அமெரிக்க வான்வழிப்படைகள் நடத்திய தாக்குதலில் ஹபீஸ் சயீத் கான் கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தங்கள் அமைப்பை வலுவாக காலூன்ற வைக்க நினைத்த ஐ.எஸ் அமைப்புக்கு ஹபீஸ் சயீத் கான் கொல்லப்பட்டது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஐ.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவராக கருதப்பட அப்துல் ராப் காதீம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்க வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

is