வடக்கு கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: 4 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

வடக்கு கலிபோர்னியாவின் இரண்டு நகரங்களில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ, பின்னர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் பரவியது.

இதனால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் அழிந்து நாசமானது. 4 ஆயிரம் மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் 90 மைல்கள் தூரத்தில் உள்ள லோவர் லேக் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் தபால் நிலையம், ஒயின் கடை, சிறு வணிக கடைகள் ஆகியவை நாசமாயின.

நாட்டில் நிலவி வரும் வரலாறு காணாத வறட்சி காரணமாக தீயானது அடுத்தடுத்து எளிதில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு படை அதிகாரிகள் தீயை அணைக்கு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.