அமெரிக்க தூதரகம் அருகே ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மையப்பகுதியில் அமெரிக்க தூதரகம் மற்றும் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அருகே ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர்.

ராணுவ வாகனத்தில் தீவிரவாதிகள் ஒட்டிவைத்திருந்த குண்டு வெடித்ததில் ராணுவ அதிகாரி உள்பட இருவர் படுகாயமடைந்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இங்குள்ள பாக்லான் மாகாணம், தனா-இ-கோரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்தை இன்று தாக்குதலின் மூலம் சூறையாடி, கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள், சிலரை சுட்டுக் கொன்றதாகவும், பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Bomb-attack-targets-army-in-Kabul-wounds-2_SECVPF