ரி.வி பார்க்க இடையூறு செய்த 4 மாத குழந்தையை 22 தடவை கையால் குத்தி கொன்ற தகப்பன் (Photos)

அமெரிக்காவில் 4 மாத குழந்தையை 22 தடவை கையால் தந்தை குத்திக் கொன்றார்.

அமெரிக்காவின் மினேபொலிஸ் நகரை சேர்ந்தவர் காரி மோரிஸ்(21). இவருக்கு எமர்சின் என்ற 4 மாத பெண் குழந்தை இருந்தது.

சம்பவத்தன்று காரி மோரிஸ் மட்டும் வீட்டில் தனியாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் மனைவி இல்லை குழந்தை எமர்சின் மட்டும் தொட்டிலில் படுத்து இருந்தாள். அவள் உரக்கமாக சத்தமிட்டு ஆ… ஊ… என பேசிக்கொண்டிருந்தாள் அது மோரிசுக்கு இடையூறாக இருந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த அவர் குழந்தையின் சத்தத்தை நிறுத்த பல விதங்களில் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. எனவே ஆத்திரம் தலைக்கேறிய அவர் குழந்தையின் முகத்தில் 15 தடவையும், மார்பில் 7 தடவையும் கையால் குத்தினார். பின்னர் குழுந்தையின் கைகளை அதன் மார்புடன் சேர்த்து வைத்து இறுக்கி அதன் அழுகையையும், சத்தத்தையும் நிறுத்த முயன்றார்.

இதற்கிடையே இவரது சித்ரவதை தாங்காமல் குழந்தை எமர்சின் பரிதாபமாக இறந்தது. அதன் பின்னர் தனது தாயார் மற்றும் மனைவியை செல்போனில் அழைத்தார்.

போலீசுக்கும் தகவல் கொடுத்து தான் குழந்தையை கொலை செய்து விட்டதாக கூறினார். உடனே அங்கு வந்த போலீசார் காரிமோரிசை கைது செய்தனர்.

rr

375D552500000578-0-image-a-11_1471526089064