ஒன்றாரியோ மாகாணத்தில் அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது பற்றிக் பிறவுனே

இந்த இளவேணில் காலமே கத்தலின் வின் அவர்கள் ஒரு முதல்வராக இறுதியாக அனுபவிக்கும் இளவேணிற் காலமாக இருக்கப் போகின்றது என ரொறன்றோ ஸ்ராரும், ஹப்பிறிங்றன் போஸ்ற் பத்திரிகையும் தெரிவித்துள்ளன.

போரம் றிசேர்ச் இங்க் என்ற தரமான ஆய்வு நிறுவனத்தின் தகவல்களின்படி அடுத்த ஆட்சியை அமைக்கப் போகும் கட்சியாக முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சி 41 வீத ஆதரவையும், லிபரல் கட்சி 28 வீத ஆதரவையும், புதிய ஜனநாயகக் கட்சி 23 வீத ஆதரவையும் பசுமைக்கட்சி 5 வீத ஆதரவையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபரல் கட்சி சார்பு நிலையுள்ள பத்திரிகைகள் இரண்டு இந்தச் செய்தியைப் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்ததோடல்லாமல், முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் கடந்த இரண்டு கருத்துக் கணிப்புக்களிலும் முன்னேறிச் செல்லும் விதம் பற்றியும் புகழாரம் சூட்டியுள்ளன.

போரம் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் தலைவர் இந்த முன்னேற்றம் பற்றி மக்கள் அதீத ஆய்வுகளை மேற்கொண்டாலும், பொதுத் தேர்தலிற்கு இன்னமும் 18 மாதங்கள் காலமிருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார்.

இருந்த போதும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சி உறுதியான முறையில் முன்னேறிச் செல்கின்றது என்பதைக் காட்டத்தவறவில்லை எனவும் தெரிவித்துள்ளதுடன், லிபரல் கட்சி ஏதோ மாஜயாலமாக முன்னேற்றத்தையடையும் என நம்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

சுமார் 1,097 பேரிடம் நடத்தப்படட இநதக்; கருத்துக் கணிப்பில் பெறப்பட்ட தகவல்கள் 20 தகவல்களில் 19 தகவல்கள் சரியானவை என்று எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் எனவே 97 வீதமான பதில்கள் சரியானவையாகவும் இருக்கும் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

patric