1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் டெர்ரி கிறிஸ்டியன் ஞானக்குமார்

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டெர்ரி கிறிஸ்டியன் ஞானக்குமார் (University UEL B.sc-இறுதியாண்டு மாணவன்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பன் சுருவிலைச் சேர்ந்த ஞானக்குமார் மொறின் தம்பதிகளின் அன்புப் புதல்வன் ஆவார்.

கார்த்திகை பதினொன்று
எம் செல்வமே தியறி
நாம் உம்மை கடைசியாய் கண்ட கரி நாள்
பல்கலைக்கழகம் சென்ற உன்னை
கயவன் உருவில் காலன் கவ்விய நாள்

வண்ணக் கனாக்களின் வாரிசே
உன்னை பிரிந்து ஆண்டொன்று ஓடி
உருண்டதையா என் நிமலனே
என் நிழல் கூட என்னை பிரிந்து சென்றுவிட்டதையா
நீ இல்லா இப் புவி எம்மை வாட்டி வதைக்குதையா..

என் கருவறை சுமந்த உன்னை
கல்லறை சுமக்குதையா
கருவோடிருந்த திருவில்லை
என் அறையில் நான் இல்லை
உன் கல்லறையில்தான்
தண்ணீரின்றி எம் கண்ணீர் ஊற்றி..

நந்தவனம் வளர்த்து தவமிருக்கின்றோம்
இறையை இறைஞ்சி நீ வருவாயென்று
அம்மா அப்பா கதைப்பது கூட கண்ணீரில்தான்
அண்ணா அக்கா கூட வைத்தியம் படித்தும்
பைத்தியம் பிடிக்காமலிருக்க
தலையிலடித்து திரிகிறார்கள்

உறவுகள் உற்சாகமிழந்து உளறுகிறார்கள்
ஒப்பாரி ஒன்றே இப் பாரினில்
கருவறையில் தெரிந்து கொண்ட
கர்த்தரின் சன்னிதானத்தில் இருக்கும் உன்னை
இருகரம் கூப்பி ஏந்தி
உன் அக்காவின் கருவறையில் மறு மகனாய்
வருவாய் என்று விடை பெறுகின்றோம்
எம் உயிரே.

அன்பின் அப்பா, அம்மா, அண்ணா,அக்கா, மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

உயிர்ப்பும் நானே…உட்டானமும் நானே…
ஜேசுவே உன் பாதம் பஞ்சமே..

அன்பார்ந்த எம் உறவுகளே தியறியின் துயர்பகிர்விற்கு ஆறுதல் தந்தும் ஆற்றுப்படுத்தியும் அவன் பிரிவிலிருந்து நீவிர் இறந்து விடப்படாதென்று நாம் உங்கள் பக்கம் நிற்கிறோம் தியறி என்றும் வாழ்கின்றான் எங்களுடன் என்று தைரியத்தை வரவழைத்து நேரில் வந்தும் தொலைபேசி மூலமும் இணையதள மூலமும் ஆறுதல் தெரிவித்துக்கொண்ட உறவுகளே எமது தாழ்மையான அறிவித்தல் ஒன்று 11-11-.2013 அன்று 11:00 மணிக்கு Holy cross Church 208, Sangley Road, Catford SE6 4AS, London, United Kingdom என்னும் முகவரியில் அன்னாரின் ஓராண்டு நினைவு திருப்பலி பூசையிலும் அவரின் நினைவாக வழங்கப்படும் போசன பந்தியிலும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மண்டப முகவரி:
St. Lawrence Centre,
37 Bromley Road,
Catford SE6 2TS,
United Kingdom

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஞானக்குமார்(அப்பா) — பிரித்தானியா
தொலைபேசி : +442086973990
மொறின்(சுசி-அம்மா) — பிரித்தானியா
கைப்பேசி : +447940010156
வசந்தன்(மாமா) — பிரித்தானியா
தொலைபேசி : +442086138131
கைப்பேசி : +447946130596