மரண அறிவித்தல்

திருமதி கருணாகரன் சாரதாம்பாள்

  -   மறைவு: 23.02.2022

புங்குடுதீவு -10 ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைச் சேர்ந்த திருமதி கருணாகரன் சாரதாம்பாள் அவர்கள் இன்று (23) இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

கண்ணகை அம்மன் தட்டையன்புலம் சந்தி, புங்குடுதீவு 10 வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.சாரதாம்பாள் கருணாகரன் அவர்கள் இன்று யாழ் மருத்துவமனையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கொழும்பு ஆமர் வீதி வர்த்தகர் திரு திருமதி. ஆர்.எம். சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும், புங்குடுதீவு-1ம் வட்டாரம் மணியம் ஸ்ரோர்ஸ் திரு திருமதி .சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரபல சமய சமூகத்தொண்டர் வர்த்தகர் மறைந்த அமரர் திரு.கருணாகரன் அவர்களின் அன்பு துணைவியாரும் சுகிர்தா கலையரசி.முரளிதரன் நாவலன் (வேலணைபிரதேசசபை உறுப்பினர்) குணாளன் ஆகியோரின் அருமைத் தாயாருமாவார்.

அன்பும் பண்பும் அமைதியும் சாந்தமும் நிறைந்தவராய் தாய்க்குலத்தில் தங்கமாய் வந்துதித்து உற்றார் உறவினர் ஊரவரையெல்லாம் அரவணைத்து வாழ்ந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
நாவலன்
கைப்பேசி : +94 (77) 716 8755
குணாளன்
கைப்பேசி : +94 (77) 894 5856