31 ஆம் நாள் நினைவஞ்சலி

திரு. நல்லையா திருக்குமரன் (களஞ்சியப் பொறுப்பாளர்)

ஊருடன் கூடி ஒற்றுமையாக வாழ்ந்து மக்கள் மனங்களில்
நீங்கா இடம் கொண்டாய், அன்பான நண்பனாய் பெருமகனாய்
வாத்தி என்னும் புனை பெயருடன் எப்போதும் புன்னகை
தவழும் முகத்துடன் எம் மனங்களைக் கொள்ளை கொள்ளும்
மென்மையான வார்த்தைகள் பேசி பெரும் பண்பாளனாய் வாழ்ந்தாய்…

மானிடனாகப் பிறந்தால் மரணம் என்பது உறுதி
மனிதநேயத்துடன் மானிடத்தை நேசித்தவன்
பிறர் நலன்களை உன் உயிர்காற்றாய் சுவாசித்தவன் நீ…

கடல் அலை செய்த கொடுரத்தால் எம் இனத்தின்
துயர நிலை கண்டு துடித்தாய்…

எம் இன சிறார்களைக் காக்க ஒரு சில நாட்களில்
உணவுகள் உடைகள் அனைத்தையும் எம் தேசம் நோக்கி அனுப்பி
வைக்க நீ பட்ட துன்பங்களும் துயரங்களும் தான் எத்தனை எத்தனை…

நிர்க்கதியான எம் இன சிறார்களை உன் பாசக்கரங்களில்
அணைத்தும் கொண்டு பல தடைகளை தாண்டி சிறார்களின்
வாழ்விற்கு வழி காட்டும் ஒளியானாய்…

சிறார்களின் எதிர்கால வாழ்கைக்காக உன்னை நீயே
வருத்திக் கொண்ட போதும் சிறார்களைக் காக்கும் ஒரே
நோக்கத்தில் நீபெரும் வெற்றியும் கண்டாய்…

உன் பிரிவு என்பது மரணம்மல்ல
உன் போன்ற பண்பாளன் மரணிப்பனும் அல்ல…

மானிடனாக பிறந்ததற்கு மதிப்பளித்த மாமனிதன் நீ…

நீ எப்போதும் மக்களின் மனங்களிலும் சிறார்களின் மனங்களிலும்
என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாய் நண்பா…

உன் இலட்சியங்களையும் மனித விழுமியங்களையும்
தாங்கிக் கொள்ள உன் வழியில் ஆயிரம் ஆயிரம் மனித
நேயத் தோழர்கள் பயணித்துக் கொண்டு தான் இருப்பார்கள்…

உன் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றோம்…

சுனாமி சிறுவர் உதவி நிலையத்தார்,
உன் சிறார்கள்.
Tsunami Kinder Hilfe (TKH)
சுனாமி சிறுவர் உதவி நிலையம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
யோகிம்
கைப்பேசி : 079 566 96 09
றஞ்சித்
கைப்பேசி : 079 872 55 56
கமல்
கைப்பேசி : 077 443 35 01
றூபன்
கைப்பேசி : 078 740 84 75
முகுந்தன்
கைப்பேசி : 079 281 73 82