கல்முனை-03 சின்னத்தம்பி வீதியின் அவல நிலை(video)

கல்முனை மாநகருக்குட்பட்ட கல்முனை-03 சின்னத்தம்பி வீதி பல தசாப்த காலமாக புனரமைப்பின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

இவ்வீதி புனரமைப்பு தொடர்பாக பொதுமக்களாலும் வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்கத்தாலும் பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டது.இருந்த போதிலும் மாநகர சபையில் நிதி பற்றாக்குறை இருப்பதாக மாநகர நிர்வாகிகள் பதில் அளித்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

இவ்வீதியானது 600m நீளம் கொண்டது, 40 குடும்பங்களுக்கு மேல் இவ்வீதியில் வாழ்ந்தும் வருகின்றார்கள்.இருந்தபோதிலும் இவ் மக்களுக்கான தீர்வை மாநகரசபை ஏன் கொடுக்க மறுக்கிறது எனும் கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் சி.என்.என் இன் எமது பார்வை நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடம் எமது செய்தியாளர்கள் பதிவு செய்த காணொளி கீழே…