மரண அறிவித்தல்
திருமதி றாஜினி திருக்குமரன்
யாழ்.கொய்யாதோட்டத்தைப் பிறப்பிடமாகவும்,இத்தாலியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட றாஜினி திருக்குமரன் அவர்கள் 30-11-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, லட்சுமி தம்பதிகளின் பேத்தியும்,
வைரவநாதன், லைலா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவா, கருணாதேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
திருக்குமரன்(குமரன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அடீனா அவர்களின் அருமை தாயாரும்,
நளினி, நந்தா, ராகினி, பபா(UK), அமுது ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கண்ணன்(UK), கிருபா, நகுலன், ஜெகன்(இத்தாலி), மது, காலஞ்சென்ற ரமேஷ், கஜேந்திரன்(கஜன்), ராஜி, கவிதா, காலஞ்சென்ற நர்மதா, சங்கீதா, காண்டீபன், துர்க்கா(சுவிஸ்), விது, தீபா ஆகியோரின் மைத்துனியும்,
மோகனராஜா, கண்ணா(இலங்கை), மேனகா, ரவி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
காலஞ்சென்ற ரங்கநாதன், கமலாதேவி, சிறி, காலஞ்சென்ற சோமு, ஆனந்தன் ஆகியோரின் மருமகளும்,
அஞ்சலா அவர்களின் பெறாமகளும்,
அருண், அஜீ, ஆகாஷ்(UK) ஆகியோரின் சித்தியும்,
அபிஷா(UK), கிஷோரி, ஜீவிகா, அஷ்ணிகா, அஷ்விந்த் ஆகியோரின் பெரியம்மாவும்,
பிரணவன், அபினன், கிருஷகி(சுவிஸ்), கேசவன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
திருக்குமரன்(குமரன் – கணவன்)

