பிரதான செய்திகள்

உலக சாதனை படைத்த இலங்கை நாடாளுமன்றம்

இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்று வந்த குழப்ப நிலை நாட்டு மக்களிடம் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பெரும்பாலான பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் நாளொன்றுக்கான ...

மேலும்..

ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்று!

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு வரும் 23ஆம் நாள் – வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, உடனடியாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய வருகை தரவில்லை. பிரதி சபாநாயகர் ...

மேலும்..

நாட்டை வழிநடத்துபவர் சுமந்திரனா? விமல் வீரவன்ஸ வீராவேச பாய்ச்சல்!

சுமந்திரனின் செயற்போக்கில்தான் தற்போது நாடு நகர்ந்துகொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் அவர் செயற்படுகின்றார். - இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ. கொழும்பில் நேற்று ஜனாதிபதி கட்சித் தiலைவர்களைச் சந்தித்தார். கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு முடிவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் ...

மேலும்..

இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் சபா நாயகர் கரு ஜெயசூரிய, கட்சித் தலைவர்களை 12 மணிக்கு சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சிகளின் மாநாடு ...

மேலும்..

நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் திடீர் முடிவு!

நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடவுள்ள நிலையில் நாடாளுமன்றின் பொதுமக்கள் கலரி மூடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்காகச் செல்லவிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்றையதினமும் ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற காரணத்தால் ...

மேலும்..

அரசியல் குழப்பத்தைத் தீர்க்க ஐ.நா. முயற்சி!

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் வன்முறைகளுக்கு வித்திட்டுள்ள அரசியல் குழப்பம் அதற்கு வெளியே பரவக்கூடியஆபத்து எழுந்துள்ள நிலையில், இந்த குழப்பத்தை தீர்த்துவைக்கும் தீவிர முயற்சியில்ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக களத்தில் இறங்கியிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி, ஹனா சிங்கர் சிறிலங்காவிலுள்ள அரசியல் ...

மேலும்..

ரணில்தான் பிரதமர்! – ஐ.தே.க. விடாப்பிடி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள தரப்பினர் என்ற ரீதியில் இந்த நாட்டின் பிரதமர் யார் என்பதை ஐக்கிய தேசிய முன்னணியே தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக்கப் ...

மேலும்..

கொழும்பில் பந்தில் ஹெரோயின்!

கொழும்பிலிருந்து வெலிமடையை நோக்கி பண்டாரவளை ஊடாக பயணித்த தனியார் பஸ் ஒன்றில் சுமார் ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் பஸ்ஸின் நடத்துனர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பண்டாரவளை ...

மேலும்..

சீ.ஐ.டி நிஷாந்த சில்வா அதிரடியாக இடமாற்றம்

சிறிலங்காவில் பிரதமர் யார் என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில் வெள்ளை வான் கடத்தல், ஊடகவியலாளர் படுகொலை,சித்திரவதைகள் உள்ளிட்ட கொடூரங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவம், கடற்படை உள்ளிட்ட அரச படைப் பலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட படைப் புலனாய்வாளர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்த சீ.ஐ.டி ...

மேலும்..

நேற்று மைத்திரிக்கு சோகம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு தீர்வை காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டம் இணக்கப்பாடுகள் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை உள்ளதாக ரணில் தரப்பினரும் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மஹிந்த தரப்பினரும் பரஸ்பரம் ...

மேலும்..

இன்று மீண்டும் பெரும்பான்மையை நிரூபிப்போம் – ஐதேக

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு  மீண்டும் கூடும் போது, தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று சிறிலங்கா  அதிபர்  மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட ஐதேக, “முடிவுகள் ...

மேலும்..

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் மகிந்தவின் பிறந்தநாள்!

சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நேற்றிரவு அதிபர் செயலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் ஏற்பாட்டிலேயே இந்தக் கொண்டாட்டம் இடம்பெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை அதிபர் ...

மேலும்..

ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த?

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து ...

மேலும்..

ஒரு தரப்பினரால் எதனையும் தீர்மானிக்க முடியாது: மஹிந்த

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளில் ஒரு தரப்பினர் மாத்திரம் எதனையும் தீர்மானிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

பிரதமர் மஹிந்த தலைமையில் இன்று விசேட கூட்டம்

இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று (திங்கட்கிழமை) காலை கூட்டமொன்றை நடத்தி தீர்மானிக்கவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் எந்ததொரு சிறந்த தீர்வும் எட்டப்படாத காரணத்தால் அவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு ...

மேலும்..