பிரதான செய்திகள்

மலையகத்திலும் பட்டாசு கொளுத்தி பெரும் ஆராவாரம்

இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மலையகத்தில் தலவாக்கலை நகரிலும் பட்டாசுகொளுத்தி பெரும் ஆராவாரம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள். வழமைக்கு மாறாக தலவாக்கலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் உட்பட நகரவாசிகள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  

மேலும்..

மட்டக்களப்பு கச்சேரிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்த கட்சி ஆதரவாளர் கைது

மட்டக்களப்பு கச்சேரிக்குள் அனுமதியின்றி அரச அதிபரின் அறைக்குள் நுழைந்து   அடாவடித்தனம் செய்தவர் மட்டக்களப்பு தலைமையாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . இன்று காலை கணநாதன் விநோஜித் எனும் நபர் அரசாங்க அதிபரின் அனுமதி இன்றி அரச அதிபரின் அறைக்குள் நுழைந்து மேசை மேலே ...

மேலும்..

தமிழர்கள் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும்- கோட்டாபய

தமிழர்கள் எதிர்காலத்தில் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை, அநுராதபுரம்- றுவன்வெலிசாயவில், இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.    

மேலும்..

மட்டக்களப்பு பனிச்சங்கேணி வாவியிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை  கண்டெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியூரிலிருந்து  பேருந்தொன்றில்  பனிச்சங்கேணிப் பகுதிக்கு வந்திறங்கிய அந்தப் பெண், காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். பனிச்சங்கேணிப் ...

மேலும்..

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு சற்றுமுன்னர் ஆரம்பமானது. இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் ...

மேலும்..

மட்டு இருதயபுரம் பகுதியில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றில் இருந்து கைவிடப்பட நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு மீட்டுள்ளதாக மட்டுதலைமையக பொலிசார் தெரிவித்தனர் . இருதயபுரம் 10 ம் குறுக்கு வீதியிலுள்ள குறித்த பாழடைந்த வெற்றுக்காணியில் அருகிலுள்ள சிறுவர் பந்து ...

மேலும்..

புதிய ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சம்பந்தன் வாழ்த்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தொலைப்பேசி உரையாடலின்போது, ...

மேலும்..

கோட்டாபயவுக்கு ஆலோசனை வழங்கும் சங்ககார

அரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய புதிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்ததென புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, குமார் சங்கக்கார தனது ...

மேலும்..

தேர்தல் வெற்றியின் பின்னர் இளைஞர்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் கோத்தபாய..!!

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றது.இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்க்ஷவே முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில் ராஜபக்க்ஷ குடும்பத்தினரும் பெரமுன கட்சியினரும் பெரும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்.அந்தவகையில், கோத்தபாய ராஜபக்க்ஷ இளைஞர்களுடன் ...

மேலும்..

இலங்கையின்புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் கோத்தாபய ராஜபக்ஷ…!!

2019 இலங்கை ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளரான கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு அருகில் இன்று முற்பகல் கோத்தபாய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.இதனைத் தொடர்ந்து அவர் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் ...

மேலும்..

சற்று முன்னர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு…!

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும், மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் கோத்தபாய முன்னிலையிலிருப்பதை ...

மேலும்..

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் பங்கேற்பு…!

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்கும் நிகழ்வு அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய வளாகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர்களையும் கலந்து கொள்ளுமாறு, பிரதமர் ரணில் ...

மேலும்..

கோட்டாபய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும்; கருணா!

கோட்டாபய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் என கருணா தெரிவித்தார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், நான் வாக்களிக்கச் சென்ற பின்னர் தெரிவித்திருந்தேன், 52 வீதம் வாக்குகளைப் பெற்று ...

மேலும்..

நேற்று அலரி மாளிகையில் நடந்தது என்ன?

நேற்று பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சிறந்தது என அதிகமானோர் கருத்துத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...

மேலும்..

வடக்குகிழக்கு மக்கள் இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தியை புதிதாக நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள்

  வடக்குகிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலிலே தமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதிவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள். அந்தச் செய்தியினை அல்லது அவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி கருத்திற்கொண்டு செயற்படுவார் என்று நம்புகின்றோம் என இலங்கைத் ...

மேலும்..