மட்டக்களப்பில் தமிழர் பிரதேசத்தில் மேலுமொரு ஆக்கிரமிப்பு விகாரை ?

தமிழர் பிரதேசத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அடுத்ததாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தினை சிங்கள மயமாக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரையின் விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது .

ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் சிங்கள தேசத்துக்குள் படி படியாக கரைந்து கொண்டிருக்கின்றன அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் . கிழக்கு மாகாணம் முழுவதுமாக சிங்களதேசத்தின் திட்டமிட்ட அபகரிப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களிடமிருந்து முற்றாக பலாத்காரமாக பறிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு அவற்றை அபகரிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக நடந்தேறிவருகின்றது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற குடும்பிமலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணிகள் திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.