கனடாச் செய்திகள்

இலங்கைப் பெண்ணின் மகனுக்கு 350,000 டொலர்கள் நிதியுதவி

கனடாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மகனுக்கு, தனது எதிர்கால செலவினை கருத்திற்கொண்டு 350,000 டொலர்கள் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. தாய், தந்தையை இழந்திருந்த அவரின் மகன் டியோனுக்கு 150,000 டொலர்கள் உதவித் தொகை தேவையாக உள்ளதென ‘GoFund’ நிதிதரட்டும் இணையதள பக்கத்தில் ...

மேலும்..

ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பம்

ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன. ஒன்ராறியோவின் தற்போதய சட்டமன்றம் கலைக்கப்படுவதான அதிகாரபூர்வ பிரகடனத்தில் ஆளுநர் நாயகம் எலிசபெத் டெளட்ஸ்வெல் கையெழுத்திட்டுள்ளதன் மூலம், ஒன்ராறியோவின் 41ஆவது சட்டமன்றுக்கான தேர்தலுக்கு வழிவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்தே இன்று தேர்தல் பரப்புரைகளை கட்சிகள் உத்தியோகபூர்வமாக தொடங்கவுள்ளதுடன், ...

மேலும்..

முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்

ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் தாக்கத்தின் விளைவால் வடக்கு கிழக்குப் பகுதியில் ஏராளமான ...

மேலும்..

கனடாவில் இடம்பெறும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு

கனடாவில் இடம்பெறும் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு தமிழர்களுக்கு சுய நிர்ணய அடிப்படையிலும் வரலாற்றுரீதியாகவும் தாயகம் ஒன்று உண்டு! ஈழத்தாயகத்தில் உலக நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா அரசு ஒரு தமிழினப்படுகொலையை நடாத்தியது. சர்வதேச விசாரணை வழியாகவே தமிழருக்கு நீதி ...

மேலும்..

Ajax நகரசபையில் மே 18, தமிழரின் நினைவேந்தல் நாளாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழர் நினைவு அறக்கட்டளையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தினால் இந்த செயற்பாடு சாத்தியமானது. இதுபோன்று  Markham, Mississauga, Stouffville ஆகிய இடங்களுக்கும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டு செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

மேலும்..

கனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு

ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ் இனஅழிப்பு எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு வரும் மே 5 மற்றும் 6 இரு நாட்களாக கால்ற்றன் பல்கலை கழகத்தில் இடம்பெறுகிறது. உலகில் பல பாகங்களிலிருந்து புகழ் பெற்ற ...

மேலும்..

விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. கடந்த 24ஆம் திகதி ரொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 46 வயதான ரேனுகா அமரசிங்க என்ற இலங்கை பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் இலங்கையின் ஹொரண, ...

மேலும்..

ஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும். இன்று ஒட்டாவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும் படங்கள் எம்மவரின் முயற்சிகளின் அடுத்த படியாக நிறுவி ...

மேலும்..

வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கனடாவில் வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரித்துவருவதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கனடாவின் மனித வள நிறுவனம் ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாம் வேலைசெய்யும் இடங்களில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக 17 சதவீதம் பேர் தெரிவித்துள்ள ...

மேலும்..

ஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும் படங்கள் எம்மவரின் முயற்சிகளின் அடுத்த படியாக நிறுவி ...

மேலும்..

‘Humboldt Broncos’ அணிக்காக ஒன்றிணைந்த கனடா

கனடா வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக, ‘Humboldt Broncos’ ஐஸ் ஹொக்கி அணியின் பஸ் விபத்து கருதப்படுகின்றது. இந்த விபத்தில் இளம் வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோரை நினைவு கூறும் முகமாக அரசியல்வாதிகள், வாகனசாரதிகள் , மாணவர்கள் ...

மேலும்..

காருக்குள் நிர்வாணம், அரை குறை குளியல்: கோடீஸ்வர வாரிசுகளின் வாழ்க்கை

பெரும் கோடீஸ்வர வாரிசுகள் தமது ஆடம்பர வாழ்வை வெளியுலகிற்கு காட்டுவது ஒன்றும் புதுமையல்ல. இன்ஸ்டகிராம் போன்ற சமூகதளம் இதற்கு வெகு பிரபலம். இதனூடாகவே பெரும் கோடீஸ்வரர்கள் தமது தினசரி வாழ்க்கை, ஆடம்பரச் செலவு, கார்கள் என அனைத்தையும் உலகிற்கு காட்டுவர். அந்தவகையில் ஹங்கேரி நாட்டின் கோடீஸ்வர ...

மேலும்..

“தென்மராட்சி விழா” தென்மராட்சி அழைக்கிறது

தென்மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தியை குறிப்பாக எம்பிரதேசத்தின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முக்கிய குறிக்கோளாக்கொண்டு செயல்படும் தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம் (TDF) எம்மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக தென்மராட்சி விழாவினை நடாத்துகிறது. தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம் சர்வதேசரீதியாக செயல்பட்டுவரும் அமைப்பாகும். இது ஒரு தன்னார்வ தொண்டுநிறுவனம் ஆகும். சகல உறவுகளும் ...

மேலும்..

கனடாவில் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற சிறந்த மற்றும் மோசமான நகரங்கள்

கனடாவில் வேலைவாய்ப்பு சந்தையில் சமீபகாலமாக புதிய புரட்சி உருவாகியுள்ளது, கடந்தாண்டு மட்டும் 335,000 முழுநேர வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலையின்மை 5.8 சதவிகிதமாக குறைந்துள்ளது, அதாவது 1976ம் ஆண்டுடன் ஒப்பிடும் அளவுக்கு வேலையின்மை சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மொன்றியல் வங்கி வெளியிட்டுள்ள ...

மேலும்..

பூர்வீகக் குடிகளுடனான சந்திப்பு

மார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமையன்று, தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக் சமூகத்திற்கும்  இடையேயான வரலாற்று ரீதியான சந்திப்பு நடைபெற்றது. Tsi Tyonnhet Onkwawena (TTO) மொழி மற்றும் கலாச்சார மையம் (மோஹாக் சமூகம்) மற்றும் தலைமைக்கும் புதுமைக்குமான நடுவம் (CFLI) அமைப்புக்களுடன் இணைந்து  கனடிய தமிழர் பேரவை, இந்த பரிமாற்றத்தைமுதன்முதலாக ஏற்பாடு செய்திருந்தது.   ஒன்ராறியோவில் இருந்து 135 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் Belleville நகரில் தங்கியிருந்து இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். முதல் நாளில், டயன்டனாகா மோஹாக் சமூகம் அவர்களின் கலாச்சாரம், கலை, கைவினை, விளையாட்டுகள், மொழி, நடனங்கள் மற்றும் இசை ஆகியவற்றை விளக்கமாக காட்சிப்படுத்தி, அவர்களின்பங்கேற்பாளர்களுக்கு பாரம்பரிய மோஹாக் உணவைப் பரிமாறினார்கள். இந்த நிகழ்வானது பூர்வீகக்குடிகளின் ஒரு மூதாதையரின் ஆசீர்வாதத்துடனும், வரவேற்புரையுடனும் ஆரம்பமாகியது. மோஹாக் சமூகத் தலைவர் டான் மரக்ள் (Chief Don Maracle) வரவேற்புரையுடன் பூர்வீகக்குடிகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வழங்கினார். இப்பகுதியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினராகியமைக் போஸ்ஸியோ (Mike Bossio) வாழ்த்துரையாற்றினார். மோஹாக் சமுதாயத்தின் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்த Tsi Tyonnheht Onkwawenna மொழி மற்றும் கலாச்சார மையத்தின்நிறைவேற்று இயக்குநரான கால்லி ஹில் (Callie Hill) தமிழ் கனடியர்களை வரவேற்றார்.  "மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதி டயன்டனாகா மோஹாக் பிராந்தியத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து நடாத்தப்பட்டபண்பாட்டு நிகழ்ச்சியானது தமிழ் சமூகத்திற்கு பூர்வீக குடிகள் பற்றி விளங்கப்படுத்துவதற்கும்  தமிழ் சமூகத்தை அறிந்துகொள்வதற்கும் ஏதுவாக அமைந்தது. இது மிகவும் அர்த்தமுள்ளதும்முழுநிறைவானதுமான அனுபவம், இந்த நிகழ்வை தொடரும் உறவின் தொடக்கமாக நாம் பார்க்கிறோம்" என்று TTO நிர்வாக இயக்குனர் Callie Hill கூறினார்.   இரண்டாவது நாளில் தமிழ் கனடியர்கள் அவர்களின் கலாச்சாரம், கலை, மொழி, இசை, நடனம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். அன்றைய நாள், பாரம்பரியமான தமிழ் உணவு பரிமாறப்பட்டது. சுமார்200 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இரண்டாவது நாள் நிகழ்வு விளக்கேற்றும் வைபவத்துடன் ஆரம்பமாகியது, மேலும் சில மோஹாக் தலைவர்களும் கலந்து கொண்டனர். கனடிய தமிழர்பேரவையின் தலைவர் டாக்டர் வடிவேலு சாந்தகுமார் தனது உரையில், மோஹாக் சமூகத்தின் பாரம்பரிய நிலத்திற்கு எம்மை அழைத்து, இப்பண்பாட்டுப் பகிர்வில் பங்கேற்க ஏற்பளித்ததற்குடயன்டனாகா மோஹாக்  சமுதாயத்திற்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். பூர்வீககுடி சமூகத்திற்கு கனடிய தமிழர் பேரவையால் எழுதப்பட்ட நட்பு செய்தியுடன் ஒரு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஆர். சேரன் தனது உரையில், இரு சமூகங்களுக்கிடையில் சில ஒற்றுமைகள் இருப்பதை ஒப்பிட்டு, அனைத்து பூர்வீக மக்களுடனும் ஒற்றுமையாக இருக்கவேண்டிய தேவையைஉணர்த்தினார். நடன ஆசிரியை நிரோதினி பரராஜசிங்கத்தின் மாணவர்களின் சிறப்பு நடனங்களும், மிருதங்க வித்துவான் வாசு ஆசிரியரின் மாணவரால் நடத்தப்பட்ட மிருதங்க கச்சேரியும் மோஹோக்சமூகத்தை மிகவும் மகிழ்வித்தன. தலைமைக்கும் புதுமைக்குமான நடுவத்தின் (CFLI) இளைஞர்கள், தமிழ்க் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஒரு சிறிய நிகழ்ச்சியின் மூலம் பூர்வீக குடியினருக்குவிளக்கினார்கள்.  கோலம், பறை, கும்மி, சிலம்பம், தமிழ் விளையாட்டுகள் மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றிலும் செயல்முறை விளக்கங்கள்  இடம்பெற்றன. ஜெசிக்கா யூட் தமிழ் பாடலொன்று பாடினார்.   இந்த பண்பாட்டு நிகழ்வுக்கு ஒன்டாரியோ அரசாங்கம் ஆதரவளித்தது. ...

மேலும்..