கனடாச் செய்திகள்

காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனேடியப் பிரதமர் தலையிடவேண்டும் – தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை!!

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடாப் பிரதமர் நீக்க ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது.

உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான சேவைகளுக்கான நிதியுதவியை ஒன்ராறியோ அரசு அதிகரித்துள்ளது. மானிலமஙெ்கும் உளநலம் மற்றும் சில பழக்கங்களுக்கு அடிமையானோர் தொடர்பான சேவைக்களுக்கென ஒன்ராறியோ அரசாங்கம் மேலதிகமாக 14.75 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இது குறித்த விபரங்களை முதல்வர் டக் போர்ட்டும், உளநலம் மற்றும் பழக்க சூழ்நிலைக்கு அடிமையானோர் தொடர்பான இணை அமைச்சர் மைக்கல் ...

மேலும்..

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா – மனிதநேய உதவிகள்(photos)!

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா மனிதநேய உதவிகள் வழங்கும் பணியின் ஊடாக 54 தாய்மாருக்கான உலர் உணவுப்பொதிகள் ஒவ்வொன்றும் 1300 ரூபாய்கள் பெறுமதியானது வழங்கிவைக்கப்பட்டது, இதேவேளை உறவுகளுக்கு கைகொடுப்போம் அமைப்பும் 12 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை அன்றைய தினம் ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் | புதிய கல்வியாண்டின் தொடக்கம்.

புதிய கல்வியாண்டின் தொடக்கம் செப்டெம்பர் மாதம் புதிய கல்வியாண்டை நாம் ஆரம்பிக்கும் இவ்வேளையில், மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளதை நான் அறிவேன்.  புதிய கல்வி ஆண்டின் ஆரம்பமானது இம்முறை மிகவும் வித்தியாசமானதாக அமையவுள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், அவற்றின் சிறப்புகளை எட்டவும் இந்த ஆண்டு வழிவகுக்கும். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது தமது குழந்தைகள் பாதுகாப்புடன்கூடிய கல்விச் சூழலில் தமது வகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் என்ற மன நிறைவை பெற்றோர்கள்  அடைவர். ஒன்ராறியோவின் பள்ளிகள் மீளத் திறக்கப்படும்போது பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முதன்மையான விடயங்கள் பின்வருமாறு: அனைத்துஊழியர்களும் மாணவர்களும் ஒவ்வொரு நாளும் தாங்கள் பள்ளிக்குச் செல்லும் முன்னர் தமக்கான நோய் அறிகுறி பற்றிய சுய பரிசோதனையினை மேற்கொள்ளல் அவசியம். தமது உடல்நிலை சரியில்லை என உணர்ந்தால், அவர்கள் பள்ளிக்குச் செல்லாது வீட்டிலேயே இருத்தல் வேண்டும். கொவிட்-19நோய்த்தொற்று உள்ளதென சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ, பள்ளி நிர்வாகம் உடனடியாக அதுபற்றி அப்பகுதிக்கான பொது சுகாதார பிரிவுக்கு அறிவித்தல் வேண்டும். சந்தேகத்துக்குரிய அல்லது உறுதிப்பட்டுத்தப்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகளை ஒவ்வொரு நாளும் கல்விச்சபை பள்ளிச் சமுகத்துக்கும் ஒன்ராறியோ அமைச்சகத்துக்கும் அறிவித்தல் வேண்டும். நான்காம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வகுப்பறைகள், நுழைவாயில் பகுதி உட்பட பாடசாலை கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மூன்றாம் வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்படாவிட்டாலும்,  அவர்களும் முகக்கவசம் அணிவது சிறந்தது என ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு கருவிகளை வழங்குவதற்கு ஒன்ராறியோ மானிலம் பள்ளி நிர்வாக உதவி நிதியை அளிக்கிறது. மாணவர்களுக்குவேண்டிய சுகாதார விதிமுறைகளைப் பயிற்றுவிப்பதுடன், கை கழுவுதல் பற்றியும் அதற்கான இடைவேளைகளையும் பாடசாலை நிர்வாகம் வழங்கும். ஆசிரியர்களும் பள்ளிப் பணியாளர்களும் மேலதிகமான சுகாதார பாதுகாப்பு பயிற்சியை பெற்றுக்கொள்வர். ஒவ்வொருமாணவரும் பள்ளியில் நாள் முழுவதும் முடிந்தவரை ஒரே குழுவில் குறிப்பிட்ட ஆசிரியருடன் பயில ஊக்குவிக்கப்படுவர். மேலதிகமான ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதற்கென பணியில் அமர்த்தப்படுவர். பள்ளிகளுக்குஉடனடியாக உதவுவதற்கென 625 வரையான புதிய பொது சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் நோய்த்தடுப்பு, நோய்ப் பரிசோதனை, நோய்த்தொற்றைக் கண்டறிந்து அதற்கான தணிப்பு உத்திகளைக் கையாள்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். அனைத்துப்பாடசாலைகளும் நாள் முழுவதும் சுத்தம் செய்யப்படுவதை கவனித்துக்கொள்வதற்கென 1300 வரையான பாதுகாப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வேண்டிய துப்புரவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்துகளும் தவறாமல் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்உட்பட பள்ளிக்கு வருகை தருபவர்களுக்கான கட்டுப்பாடுகளை பாள்ளி நிர்வாகம் விதிக்கும். தரவுகளைப்பேணும் வகையில், மாணவர்களின் வருகைப் பதிவுகள், வகுப்பறையில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கை விபரங்கள், பேருந்தில் வருகை தரும் மாணவர்களின் விபரங்கள், அனுமதி பெற்று பாடசாலைக்கு வருவோர் விபரங்கள், தற்காலிக ஆசிரியர்களின் விபரங்கள் போன்றவற்றை பள்ளி நிர்வாகம் சேகரித்து வைத்திருக்கும். பெற்றோர்களின்தெரிவுகளுக்கு மதிப்பளிக்கப்படும். 2020-2021 கல்வியாண்டின்போது  அனைத்து நிலை பாடசாலைகளிலும் நேரடியாக மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிப்பது அவர்களின் விருப்பத் தெரிவாக அமையும். வகுப்புகளுக்கு நேரடியாக சமூகமளிக்காது வெளியில் இருந்து கல்வி பயிலக்கூடிய பல வசதிகளை ஆண்டு முழுவதும் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லும்வேளையில்,பெற்றோர்களும் ஆசிரியர்களும்  சமுகத்தில் உள்ள பள்ளிகளிலும் குழந்தை பராமரிப்பு மையங்களிலும், கொவிட்-19 தொற்றுகளை விரைவாக கையாள்வதற்கு ஏதுவான சூழ்நிலையை நாம் உறுதிப்படுத்துகிறோம்.      

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது!!!

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது 06-09- 2020_அன்று மொன்றியால் ...

மேலும்..

Zoom meeting invite – Toronto Tamil Sangam நூல்களைப் பேசுவோம்!!!

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

மேலும்..

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி, கனேடிய பிரதமரின் வாயில்தளத்தினை நோக்கி நீதிக்கான நெடு நடைப்பயணம் ஒன்று இடம்பெற்று வருவதோடு, பல்வேறு புலம்பெயர்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாள் ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ றூஜ் பார்க்

அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்கள் இன்று ஸ்காபரோ சுகாதாரக் கட்டமைப்பின் சுகாதார நிபுணர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் விஜய் தானிகசலம், அமைச்சர் ரேமண்ட் சோ, சட்டமன்ற உறுப்பினர்களாகிய கிறிஸ்டினா மிடாஸ், அரிஸ் பாபிகியன் ஆகியோரை சந்தித்து, மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், பாடாசாலை ...

மேலும்..

கனேடியத் தமிழர்கள், கனேடிய அரசு ஊடாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு நெடும் பயணம்

அன்பார்ந்த கனேடியத் தமிழ் மக்களே எதிர்வரும் 30-08-2020, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று,பிறம்ரன் நகரசபை  முன்றலில் இருந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி,ஒட்டாவா, பாராளுமன்றத்தை நோக்கி,  இலங்கைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரி, கால் நடை நெடும் ...

மேலும்..

இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கனடியத் தமிழர் பேரவை அனைத்துத் தமிழர்களையும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனநாயக உரிமைகளிற்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட பல பின்னடைவுகள் இருந்தபோதிலும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் விருப்பம் குறையவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முறைமை ...

மேலும்..

கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் மீண்டும் தலைவரானார் கலாநிதி அகிலன்!

தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கனடா Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S 3R7  இல் நடைபெற்றது. நியதிச்சபை உறுப்பினர்களான  (Board of ...

மேலும்..

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்க முடிவு!

நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு ...

மேலும்..

ஒன்றாரியோவில் மருந்துகளை வாங்குவதற்கான வரம்பு நீக்கம்!

மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வரம்புகளை, ஒன்றாரியோ மாகாணம் தளர்த்தியுள்ளது. பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் இப்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்ற நிலையில், ஒன்றாரியோ மாகாணமும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முடக்கநிலை காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 472பேர் பாதிப்பு- 63பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 472பேர் பாதிப்பு- 63பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ...

மேலும்..