கனடாவில் கவுன்சிலர் ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண்

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண், கவுன்சிலராக முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் பிராம்டன் நகரை சேர்ந்தவர் நவ்ஜித் கவுர் பிரார் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி பெண்

கனடாவில் கவுன்சிலர் ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் | Canadian Turban Wearing Sikh Woman Councillor

இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான இவர் சுகாதார பணியாளராக வேலை செய்து வருகின்றார்.

இந்நிலையில் அங்கு நடந்த நகர வார்டு கவுன்சிலர் தேர்தலில் நவ்ஜித் போட்டியிட்டார்.

 

 

இந்த தேர்தலில் 2 மற்றும் 6வது வார்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் எம்பி ஜெர்மைனி சேம்பர்ஸ்சை தோற்கடித்து நவ்ஜித் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் களமிறங்கிய 40 சீக்கியர்கள்

கனடாவில் கவுன்சிலர் ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் | Canadian Turban Wearing Sikh Woman Councillor

இவர் 28.85 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்காக நவ்ஜித் சிங் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 40ஆயிரம் வீடுகளில் வாக்கு சேகரித்துள்ளார்.

சுமார் 22,500பேரிடம் பேசியுள்ளார். பிராம்டன் நகர தேர்தலில் 40 சீக்கியர்கள் போட்டியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.