அவசரமாக தரையிறக்கப்பட்டு விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, முன்பகுதி தரையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் – 767 என்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும், விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் தெரிவித்துள்ளார்.இதேவேளை குறித்த விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.