பூமியைத் தாக்கும் சூரிய புயல் – கடும் எச்சரிக்கை

பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியாதெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என ஆய்வாளர்கள் தகவல் வெளிஇட்டுள்ளனர்.

இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய சூரிய சுழற்சி டிசம்பர் 2019 இல் ஆரம்பமாகியதிலிருந்து 
ஆய்வாளர்கள் மூன்று கடுமையான புவி காந்த புயல்களை மட்டுமேஅவதானித்துள்ளனர்.