கல்முனையில் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

(கஜனா)

அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினுடைய ஊழல் செயற்பாடுகளை கண்டித்து கொடும்பாவிகளினுடைய பொம்மைக்கு பூசணிக்காய் வெட்டி மதச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு 4000 பேர் உள்ளடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவலக அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் நாளைய 50 ஆவது நாளையோட்டி கல்முனையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட  ஆர்ப்பாட்டம் காலை 8.30 மணி அளவில்  சேனைகுடியிருப்பு கணேசமாக வித்தியாலயத்தின் முன்றில் ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கல்முனை பிரதான வீதி வழியாக சென்று தரவைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பொலிஸ் நிலைய வீதி வழியாக பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர்.

இதன் போதும் கணக்காளரை நியமி, பிரதேச செயலாளரை நியமி, மக்களின் உரிமையை வழங்கு உள்ளிட்ட பல கோஷங்களை முன் நிறுத்தியவாறு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் மதியம் ஒரு மணி அளவில் போராட்டம் நிறைவுற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்ற நிலையில் கணக்காளர் பதவிக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருந்தும் அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இதுவரை மாவட்ட செயலகமும் உள்நாட்டளவர்கள் அமைச்சும் மேற்கொள்ளப்படவில்லை.

சுமார் 300க்கும் அதிகமான உத்தியோகத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பிரதான பதவியான பிரதேச செயலாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை. அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டல்கள் அமைச்சும் இந்த பாரிய நிர்வாக தவறுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் 49வது நாட்களாக பொதுமக்கள் போராடிய நிலையில் எந்தவிதமான தீர்வும் இதுவரை கிடைக்கப்படாத நிலையில் இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது .