கனடாச் செய்திகள்

கனடாவின் மிகப்பெரிய நகரங்களில் தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பு!

கனடாவின் மிகப்பெரிய நகரங்களில் புதிய தொழில்கள் மற்றும் புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஈர்ப்பதற்கு திடமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நாட்களில், அவை சிறியளவில் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொண்ட்ரியல் தொழிலாளர் சந்தை வங்கியின் ...

மேலும்..

அல்பேர்டா சம்பவத்தில் தேடப்பட்டுவந்தவர் கைது!

வடக்கு அல்பேர்டா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எட்மன்டன் பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) அவர் கைதுசெய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கடந்த 5ஆம் திகதி வடக்கு அல்பேர்டாவின் இரு பகுதிகளில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவற்றில் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் ...

மேலும்..

விண்வெளியில் மர்ம ரேடியோ சிக்னல் கண்டுபிடிப்பு

சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்திலுள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடாவின் டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மிகச்சரியாக அது என்ன விதமான ரேடியோ அலைகள் என்பதோ, எங்கிருந்து வந்தது என்பது ...

மேலும்..

கனடாவின் சில பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

கனடாவின் லண்டன் பகுதியில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் கனடா அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறித்த காலநிலை ...

மேலும்..

அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஆணொருவர் காயம்!

அஜாக்ஸ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெய்லி தெருவின் கிழக்கு மற்றும் ஹாவுட் அவனியூ தெற்கு பகுதியில், ஃபால்பி கோர்ட் இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதிக்குச் ...

மேலும்..

ஒன்ராறியோ மாகாணத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் இழப்பு!

ஒஷாவாவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டோர்ஸ் வாகன உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படவுள்ள நிலையில், அதனால் ஒன்ராறியோ மாகாணத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 4 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொழிற்சாலை மூடப்படுவதன் காரணமாக, 4,400 பேருக்கான வேலை ...

மேலும்..

ரொறன்ரோவில் முதியவர் உயிரிழப்பு – 2019 இன் முதலாவது பாதசாரி உயிரிழப்பு!

ரொறன்ரோவில் முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதலாவது பாதசாரி உயிரிழப்பு என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு குயின் தெரு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குறித்த முதியவர் படுகாயமடைந்திருந்தார். இதன் ...

மேலும்..

பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் ரெஜினாவிற்கு விஜயம்!

ரெஜினா பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ரெஜினாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு செல்லும் அவர் இன்று (வியாழக்கிழமை) இரவு ரெஜினா பல்கலைக்கழகத்தின் நிகழ்வில் கலந்துகொள்வார் என லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் ரால்ப் குட்லெல் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த ...

மேலும்..

கனேடியர்கள் கைது விவகாரம் – ட்ரம்புடன் கனேடியப் பிரதமர் பேச்சு!

கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொலைபேசி ஊடாக இந்த உரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதை அமெரிக்க வெள்ளைமாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் மேலும் ...

மேலும்..

ரொறன்ரோவில் பட்டப்பகலில் துப்பாக்கச் சூடு – இரண்டு பேர் படுகாயம்!

ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். குயின் ஸ்ட்ரீட் மேற்கு மற்றும் வூட்வின் அவென்யூ பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பொலிஸார் ...

மேலும்..

வயது வெறும் எண்ணிக்கையே!- நிரூபிக்கும் கனேடிய மூதாட்டி

வயது என்பது வெறும் எண்ணிக்கை மாத்திரமே என்பதை உறுதிபடுத்தும் வகையில், நூறு வயதான கனேடிய மூதாட்டி ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கிழக்கு ஒன்ராறியோவின் கின்ங்ஸ்டன் நகரை சேர்ந்த இவர் தனக்கு நூறு வயதான போதிலும், ஒரு வகுப்புக்கேனும் தவறாது உடற்பயிற்சி மையத்தில் ...

மேலும்..

வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடன் கனடா பேச்சு

கனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வொஷிங்டனின் வரி விதிப்பு தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இதன்போது வரி விதிப்புகளை தளர்த்துவது குறித்து பேசப்படவில்லை என கனேடிய வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய ...

மேலும்..

ரொறன்ரோ பெரும்பாக்கத்தில் இரு வேறு காலநிலை : வானிலை எச்சரிக்கை!

ரொறன்ரோ பெரும்பாக்கத்தில்நேற்று (திங்கட்கிழமை) முதல் இருவேறு காலநிலை தொடர்ந்தும் நிலவும் என கனடிய சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் குறைந்தளவு பனி, உறைபனி மற்றும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும் என ஒரு சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 2 ...

மேலும்..

ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர் : பொலிஸார் விசாரணை

ரொறன்ரோ க்ளென் பார்க் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் (ஞாயிறுக்கிழமை) மாலை 5 மணியளவில், மற்றும் டஃப்பரின் வீதிப் பகுதியில் மூன்றிலிருந்து ஆறு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் ...

மேலும்..

பனி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்போது குளிர்காலநிலை நிலவி வருகின்றது இந்த காலநிலை பனி மீன்பிடி பருவத்தின் தொடக்கமாகும். இருப்பினும் காலநிலை மாற்றத்தால் பனி மீன்பிடி பாதுகாப்பானது அல்ல என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிராண்ட் ரிவர் பகுதிக்கான வெப்பநிலைகள் பூஜ்ஜியத்திற்கு கீழே வீழ்ச்சியடைந்து, சில ...

மேலும்..