கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் மீண்டும் தலைவரானார் கலாநிதி அகிலன்!

தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கனடா Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S 3R7  இல் நடைபெற்றது.

நியதிச்சபை உறுப்பினர்களான  (Board of Trustees)  வி.எஸ்துரைராஜா, சேரலாதன் செல்லையா, பூபாலசிங்கம் சண்முகம், சௌந்தரராஜா தியாகராஜா ஆகியோர் முன்னிலையில் சத்தியசீலன் ராஜரட்ணம் தலைமையில் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

கூட்ட ஒழுங்குமுறைக்கு அமைவாக நடைபெற்ற புதிய நிர்வாகத் தெரிவில் புதிய சுதந்திரன் மற்றும் தமிழ் சி.என்.என். குழுமப் பணிப்பாளரும்   Dry Zone Development foundation (Sri Lanka) இன் தலைவரும்,  Hunger Free world Foundation (Canada) இன் ஸ்தாபகரும் தொழிலதிபருமான கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி மீண்டும் தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்படடார்.

செயலாளராக சுமதி சேரலாதனும், பொருளாளராக நகுலேஸ்வரன் கார்த்திகேசுவும், உப தலைவராக தேவதாஸ் சண்முகலிங்கமும் உப செயலாளராக நடராஜலிங்கம் ஜெயக்குமாரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தன்மீது அதீத நம்’பிக்கைகொண்டு மீண்டும் தன்னைத் தலைவராகத் தெரிவுசெய்தமைக்காக தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் கலாநிதி மு.அகிலன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தென்மராட்சி சேவைநிறுவனம் கனடாவின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

புதிய சுதந்திரன் குழுமப் பணிப்பாளர் கலாநிதி மு.அகிலன் கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டக்கு தமிழ் சி.என்.என். குழுமத்தினர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

– ஆசிரியர் –

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.