நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவர் பதவி விலகல்!

கனடாவின் மிகப்பெரிய நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவரான ரொறன்ரோவின் பொலிஸ்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

ரொறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தி மாநாட்டில் சாண்டர்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

சாண்டர்ஸின் பணிக்கால ஒப்பந்தத்தில் இன்னமும் எட்டு மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். (சாண்டர்ஸின் ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை உள்ளது)
உள்நாட்டிலும் வட அமெரிக்கா முழுவதிலும் பொலிஸ் சீர்திருத்தத்திற்கான வளர்ந்து வரும் அழைப்புகளுக்கு மத்தியில் சாண்டர்ஸின் இந்த ஆச்சரியமான இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அவரது பதவி விலகலை அறிவிக்கும் போது, அவரது குடும்பத்தினருக்கும், சேவையின் சக உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும், ரொறன்ரோ மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததற்கு சாண்டர்ஸ் நன்றி தெரிவித்தார்.

ரொறன்ரோவை பாதுகாப்பாக வைத்திருப்பதில் எங்களுக்காக நீங்கள் உருவாக்கிய கூட்டாண்மைக்கு ரொறன்ரோவின் குடிமக்கள் மற்றும் சமூகங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றும் கூறினார்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேவையில் முதல் பட்டத்தை வகித்த சாண்டர்ஸ், ரொறன்ரோ பொலிஸ் சேவையின் பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். இதில் கொலை, தொழில்முறை தரநிலைகள் மற்றும் அவசர பணிக்குழு ஆகியவை அடங்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.