மா. க. ஈழவேந்தன் காலமானார் .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ( 2004 – 2007 ) செயற்பட்டிருந்த ஈழவேந்தன் என்று அழைக்கப்படுகின்ற மா.க. கனகேந்திரன் அவர்கள் 28-04-2024 அன்று கனடா ரொரண்டோ நகரில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் முக்கிய உறுப்பினராக செயலாற்றிய இவர் 1970 ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி. நவரத்தினம் தொடங்கிய தமிழர் சுயாட்சிக் கட்சியில் இணைந்தார்.தொடர்ந்து மீண்டும் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார். தமிழரசுக் கட்சி அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைக்கு ஈழவேந்தன் தலைவராக இருந்து பணியாற்றினார்.

இலங்கையில் தமிழருக்கு எதிரான வன்முறைகள் கிளம்பிய காலகட்டத்தில் 1981 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு சென்றார். விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இவரும் வேறும் நால்வரும் 1997 பெப்ரவரியில் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.. 1999 ஆம் ஆண்டில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஈழவேந்தன் 2000 டிசம்பர் 4 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தினை Tamil CNN குழுமம் தெரிவித்துக்கொள்கின்றது.