இலங்கை – கொரியாவுக்கிடையிலான கூட்டு இராணுவ பயிற்சிகள் தொடர்பில் அவதானம்

இலங்கைக்காக கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை (5) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது புது டில்லியில் உள்ள கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் (கடற்படை) சோய் யோங்சோக் சமூகமளித்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த கொரிய தூதுவரை ஜெனரல் குணரத்ன அன்புடன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன, இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசினார்.

கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் குணரத்ன மற்றும் கொரிய தூதுவர் லீ ஆகியோர் நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்  கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் சமூகமளித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்