கனேடியத் தமிழர்கள், கனேடிய அரசு ஊடாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு நெடும் பயணம்

அன்பார்ந்த கனேடியத் தமிழ் மக்களே எதிர்வரும் 30-08-2020, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று,பிறம்ரன் நகரசபை  முன்றலில் இருந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி,ஒட்டாவா, பாராளுமன்றத்தை நோக்கி,  இலங்கைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரி, கால் நடை நெடும் பயணம் ஒன்றை கனேடியத் தமிழர்கள் தொடங்கவுள்ளனர். கனடா வாழ்  ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர்சங்கங்கள்,     விளையாட்டுச்சங்கங்கள், தமிழ் முதியோர் மன்றங்கள், கனடா வாழ் தமிழர்கள் அனைவரும் நீதிகேட்கும் இந்நெடும் பயணத்தில் தங்களால் இயன்றவாறு தோள் கொடுத்து உதவுமாறும், இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பொது மக்கள்,கலைஞர்கள் அனைவரையும்,பெருமளவில் பங்குபற்றி வெற்றி பெறச்செய்யுமாறும், அன்புடன்

கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:   நீதி கேட்கும் நடைபயணம்

ஆரம்பிக்கும் நிகழ்விலும்,நிறைவு நிகழ்விலும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர,மாநகர உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்இடங்களில் பெருந்திரளான மக்களைஅணிதிரளுமாறு அழைப்புவிடுக்கின்றோம்.

பாதுகாப்பு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இணைந்து பயணிக்க விரும்புபவர்கள்

இணையுமாறு உரிமையுடன் அழைக்கறோம்.

ஆரம்பிக்கும் இடம்.

2 WELLINGTON ST,WEST

BRAMPTON,ONTARIO.

L6Y 4R2

இவ்வண்ணம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தொடர்புகட்கு:

(1)நா.க.த.அரசாங்க அரசவை உறுப்பினர்

செய்தித்தொடர்பு, தகவல், தொழில்நுட்ப

உதவிஅமைச்சர்

மகாஜெயம்: 647-262-5587

(2) அருட்சகோதரன்

டேவிட்தோமஸ்: 647-852-3141

(3) நா.க.த.அரசாங்க முன்னாள் அரசவை உறுப்பினர்

யோகேந்திரன்: 1-613-854-3336

(4) மாதகல் கண்ணன்: 647-808-7766

 (5)விஜிதரன்: 647-783-3466

       (நா.க.த.அரசாங்கம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்