வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணம் நடை இலக்கை நெருங்குகின்றது!!!

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது

06-09- 2020_அன்று மொன்றியால் வாழ் தமிழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நெடு நடைப் பயணம் இன்றுடன் 6ம் நாளைத் தொட்டுத் தொடர்கிறது. இரு நடைப்பயணங்களும் 13/09/2020 அன்று ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில்,ஒட்டாவா வாழ் தமிழ்  மக்கள் உட்பட, கனடிய தமிழ்ச் சமூகத்தால் அன்று மாலை வரவேற்கப்பட்டு, அன்றைய நாள் நிகழ்வு நிறைவு பெறும்.

இறுதி நாளான 14/09/2020 அன்று இணைந்து கொள்ளும் இரு நடைக் குழுக்கழுடன் ,பல் திசை வாழ் தமிழ் மக்களும் கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி இறுதியான இரு மணி நேர நடையை ஆரம்பித்து ஒட்டாவா பாராளுமன்ற திடலில் மதியத்தின் பின் நடைப்பயணம் நிறைவு பெறும். அங்கு  நீதி கோரும் மகஜரை நடைபவனியின் இறுதியில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளனர்.

இப்பெருமுயற்சிக்கு பேராதரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும்  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ,உட்பட ஏனைய முன்னணி தமிழ்த் தேசிய அமைப்புக்கள்,தமிழ்ச்சங்கங்கள்,தமிழ்க்கொடையாளர்கள்,கட்டம் கட்டமாக நடைபயணத்தில் இணைந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள்,மற்றும் நெடுவழி எங்கும் ஆதரவு தந்த,பிற இன மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இந் நிகழ்வை தம் தேசியக் கடமையாக சுமந்து வரும்,ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும், தமிழினத்தின் சார்பில் நீதிக்கான நெடுநடைப் பயணக்குழு பணிவுடன் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்தும் இவ்வாதரவை இறுதி நாள் வரை தந்துதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.

.14/09/20 இறுதி நாளை சிறப்பிக்கும் பணியில் ரொறன்ரோவில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றது.இது பற்றிய முழு விபர தொடர்புகட்கு:-கண்ணன் 6478087766_ நிமால் 4168881128,மகாஜெயம் 647262 5587 ,விஜி 6477833466

நடைப்பயண ஏற்ப்பாட்டுக் குழுவினர்- , திரு மகாஜெயம் மகாலிங்கம் உதவி அமைச்சர், திரு.விஜிதரன் வரதராசா தாயக நா க த அ  தொடர்புகள் அமைச்சர் 09/09/2020

குறிப்பு- கோவிட்-19 தொற்றுநோய் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது பொதுவான விதிமுறையாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.