கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பத்தை கடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்…

ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்து ஒன்பது மாதங்கள் ஆனநிலையில், பட்டேல் குடும்பத்தினரை அமெரிக்காவுக்குள் கடத்துவதன் பின்னணியில் இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் ஒருவரைக் குறித்த தகவல்கள் இப்போதுதான் வெளியாகியுள்ளன.

கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பத்தை கடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்... | Accused Within The Police S Ring Of Suspicion

ரஜிந்தர் பால் சிங் (Rajinder Pal Singh, 48) என்னும் இந்தியர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகிறாராம். பலவேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையும் சென்றுள்ள அவர், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இந்திய புலம்பெயர்வோரைக் கடத்தும் ஒருகும்பலுடன் தொடர்புடையவர் என அமெரிக்க பொலிசார் கருதுகிறார்கள்.

இந்நிலையில், அவருக்கும் பட்டேல் குடும்பம் அமெரிக்கா செல்ல முயன்றதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என சந்தேகத்தை ஏற்படுத்தும் சில ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பத்தை கடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்... | Accused Within The Police S Ring Of Suspicion

நாம் மனிதக்கடத்தலை வின்னிபெக்கிலிருந்து மேற்கொள்ளவேண்டும். நான் ஏற்கனவே ரொரன்றோவில் ஒருவரிடம் இது குறித்து பேசியுள்ளேன், அவரிடம் இரண்டு சாரதிகள் இருக்கிறார்கள். அவர்கள் புலம்பெயர்ந்தோரை தங்கள் காரில் ஏற்றிச் செல்வார்கள் என்றும், புலம்பெயர்வோரை கனடாவில் தங்கவைப்பது குறித்தும், மற்றொரு முறை, தான் தான் மக்களை அமெரிக்காவுக்குள் கடத்த வாங்கும் தொகை மற்றும் அதை கனடாவிலுள்ள ஒருவருக்குக் கொடுக்கவேண்டும் என்றும் கூறும் காட்சிகள் பொலிசாருக்குக் கிடைத்துள்ளன.

அதுவும், பட்டேல் குடும்பம் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அதே நேரத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் இந்த உரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

அதைத் தொடர்ந்துதான், கனடா பொலிசாரும் சிங்கை தங்கள் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பத்தை கடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்... | Accused Within The Police S Ring Of Suspicion

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.