முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான நாட்டின் பிரதிநிதி நியமிப்பு!

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான  நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் அவர்கள் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்…

மேற்குறித்த விடயம் தொடர்பாக 15/03/2023 புதன் அன்று கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் மேற்படி விசேட நியமனம் வழங்கும்நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ டிலும். எஸ். அமுனுகம அவர்கள் வழங்கிவைத்தார்.

மேற்படி விசேட நியமனத்தைப்பெற்ற கனேடிய வர்த்தகர் திரு.ஆனந்தம் இரத்தினகுமார் தனது இந்த நியமனத்தினூடாக தாம் செயலப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக தனது ஊடக அறிக்கை ஒன்றை இன்றயதினம் வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.