மட்டக்களப்பில் 4 குழந்தைகளை பிரசவித்த தாய்

மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் பெண் ஒருவர்  ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். மட்டக்களப்பு புது குடியிருப்பத்தை சேர்ந்த 25 வயது உடைய பெண்ணே இவ்வாறு பிரசவித்துள்ளார்.

குறித்தி தாய் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஆண் குழந்தை ஒன்றும் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என 4 குழந்தைகளை  பிரசவித்துள்ளார்.

நான்கு குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையின் சிசு வைத்திய நிபுணர் வைத்தியர் இராசையா மதன் மற்றும் பணிப்பாளர் கலா ரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்துள்ளனர்.

https://youtube.com/shorts/Io_EkEcHDZc?si=VadlE6xd0QWHpcu3