கோடி ரூபா பெறுமதியான அரியவகை மருத்துவ மீன் விற்பனைக்கு

ஆழ்கடலில் அரிதாக கிடைக்ககூடிய நீலக்கிளவல்லா அல்லது நீலதூனா என்றழைக்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த மின் வகை கிழக்கிலங்கையின் காரைதீவு மீனவர்களிடம் சிக்கியுள்ளது.

காரைதீவு மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான 49 கிலோ எடையுள்ள நீல தூனா அல்லது உள்ளூரில் நீல கிளவல்லா அல்லது ஹண்டா என அழைக்கப்படும் பாரிய மீன் அகப்பட்டுள்ளது.

பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீனை விற்பதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.

இவ்வகை மீனை சாப்பிட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என நம்பப்படுகிறது . இந்த நிலையில் பிடிபட்டுள்ள இந்த மீன் ஒரு கிலோ லட்சக்கணக்கான ரூபாய் பெறுமதிமிக்கதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் யாரும் வாங்க முன் வரவில்லை .

தேவையானவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு மீனவர்கள் கோரியுள்ளனர் .

(மீனவர் தொடர்பு இலக்கம் +94 76 2986961)