ஞானசார தேரர் நாளை விடுதலையா?

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.