மாணவர்களுக்கான அரிசி விநியோகம் இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக  உலக உணவுத் திட்டத்தின் மூலம்  இந்த அரிசி தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி Fortified rice விநியோகம் கடந்த 19ஆம் தேதி வெயாங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

ஜனாதிபதியின் பணிபுரிக்கமைய இந்த நிகழ்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு மே 19ஆம் தேதி பாடசாலை புதிய தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 378835 மெட்ரிக் தொன் பருப்பு ,41208 மெட்ரிக் தான் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெட்ரிக் தொன் பேரிச்சம் பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலக உணவு திட்டத்துக்கான கூட்டுறவு செயலகத்தின் படிப்பாளநாயகம் எம்.எச்.ஏ.எம்  ரிப்ளான் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.