குறைக்கப்பட்ட சீமெந்து விலை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தத்தின் படி ஒரு சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 2,400 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என குறித்த நிறுவனங்கள் அறிவித்துள்ளது.