புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலான தகவல்

நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 100 மதுபான அனுமதிப்பத்திரங்களில் 55 அனுமதிப்பத்திரங்களை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான வேறு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.