பிரதான செய்திகள்

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார்- சிறிலங்கா இராணுவத் தளபதி

போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்றுமுன்தினம் சந்தித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா இராணுவம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து ...

மேலும்..

வவுனியாவில் சிறப்பான செயற்பாட்டை முன்னெடுக்கும் உள்ளுராட்சி மன்றங்கள்

வவுனியாவில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் சில மக்களுக்கான சிறந்த செயற்பாட்டை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் வவுனியா நகரசபை முதற்கட்டமாக திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடலொன்றினை முன்னெடுத்துள்ளதுடன் நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் போது பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் ...

மேலும்..

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி : களத்தில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (11.05.2018 காலை 10.45 மணியளவில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எம் வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக் கைதிகளிடம் பல மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் சிறைக் கைதி ஒருவர் நீதிமன்றத்தின் ...

மேலும்..

ம.இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்: யாழுக்கு சசி மகேந்திரன்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரித்த ட்ரயல் அட் பார் குழுவிலிருந்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் இடமாற்றத்துக்கான ...

மேலும்..

குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை சத்தியலிங்கம் நிரபராதியானார்!!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத் துக்கு எதிராகச் சபையில் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. அதனால் அவர் குற்றமற்றவர் என்று வடக்கு மாகாண சபை தீர்மானிப்பதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று அறிவித்தார். வடக்கு மாகாண ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி! ஸ்தம்பிதம் அடையுமா நாடு?

இலங்கை அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நூற்றுக்கு 15 வீதத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என, அனைத்து இலங்கை பேருந்து சங்கத்தின் பிரதான செயலாளர் ...

மேலும்..

‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’; கண்ணீர் மல்க கோரிக்கை

தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பாதீர்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...

மேலும்..

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் அதிரடி மாற்றம்..!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 20 ரூபாவாலும், ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் விலை ...

மேலும்..

பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்

குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை ...

மேலும்..

மைத்திரியின் கொள்கை விளக்க உரை அர்த்தமற்றது! – மஹிந்த அணியும், ஜே.வி.பியும் விசனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்கவுரையானது அர்த்தமற்றது என்று மஹிந்த அணியான கூட்டு எதிரணி, ஜே.வி.பி. ஆகியன விமர்சித்துள்ளன. 8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அக்கிராசனத்திலிருந்து அரசின் கொள்கைக் கூற்றை சுமார் 30 நிமிடங்கள் ஜனாதிபதி வாசித்தார். ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கட்சி பேதங்கள் இன்றி ஒற்றுமையாக அனுஸ்டிக்க வேண்டும்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒற்றுமையாக அனுஸ்டிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம்.இந் நிகழ்வை குழப்புவதற்கு பேரின வாதிகள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் அதற்க்கு ஒத்தாசை புரிவதுபோல் உள்ளது எம்மவர்களின் செயற்பாடுகள்.கடந்த ...

மேலும்..

எதிர்தரப்பு ஆசனத்தில் அமர்ந்த சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றின் எதிர்தரப்பு ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக அதாவது பிரதமருக்கு எதிராக குறித்த 16 பேரும் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து குறித்த ...

மேலும்..

8ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு ஆரம்பம்

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதிக்கு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை தற்போது ஜனாதிபதி நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற ...

மேலும்..

யாழ் சென்ற தமிழ் பெண்ணிடம் இனவாதத்தை கக்கிய ஊழியர்! பொங்கி எழுந்த நாமல்

யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிகவும் ஆபசமான வார்த்தைகளால் ஏசிய ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர், இன்று காலை புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்ற போது, சிங்கள ...

மேலும்..

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை என மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “சரி, ...

மேலும்..