பிரதான செய்திகள்

அப்புத்தளை காகல்ல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 56 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் இடம்பெயர்வு

பதுளை மாவட்ட அப்புத்தளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் காகல்ல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 56 குடும்பங்களை சேர்ந்த 240 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த 240 பேர் வெளியேற்றப்பட்டு, அப்புத்தளை  காகல்ல தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் ...

மேலும்..

சுவிஸ் தூதரகப் பெண் மீது இன்றும் தீவிர விசாரணை! – 4 மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம்

கொழும்பில் இனந்தெரியாத நபர்களினால் வெள்ளைக் காரில் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியிடம் இன்றும் 4 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை 9 மணிக்கு முன்னிலையாகிய குறித்த பெண் அதிகாரி  வாக்குமூலம் அளித்துவிட்டு ...

மேலும்..

சர்வதேச தேயிலை தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் – அருட்தந்தை சக்திவேல் தெரிவிப்பு

மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பு மற்றும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சங்கமும் இணைந்து 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினத்தினை அட்டனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மலையக மக்களின் மாண்பை உறுதிப்படுத்துவோம் அமைப்பின் ...

மேலும்..

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சமூக நல்லிணக்கம் குறித்த செயலமர்வு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சமூக நல்லிணக்கம் குறித்த செயலமர்வு  செவ்வாய்க்கிழமை (10) காலை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில்  இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் தலைமைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்றதுடன் சமுகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ...

மேலும்..

விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கடலாமை இறச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது

விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கடலாமை இறச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இலங்கையில் கடல் ஆமைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது. கடற் தொழிலில் ஈடுபட்டபோது மீனவரின் ...

மேலும்..

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு-அம்பாறையில் சம்பவம்

அம்பாறை உஹன பிரதேச செயலாளர் பிரிவில்  சமன்  பிரிவேனா அருகில் உள்ள  பிரதான வீதியில்  மின் கம்பம்  இடிந்து விழுந்ததால் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது குறித்த  காட்டு  யானை   மின்  கம்பத்தில் மோதி சிக்கியதுடன்   மின்சார கம்பம் மின்சார வயர்கள்  ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் என சந்தேகத்தின் பேரில் கைதாகி   விளக்கமறியலில்  வைக்கப்பட்டோரை சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்    கைதான 13  பேரையும் மீண்டும் ...

மேலும்..

கேரளா கஞ்சாவுடன் பிடிபட்ட பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்

கேரளா கஞ்சாவினை தம்வசம்    உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில்   தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு  செவ்வாய்க்கிழமை(10)    கல்முனை  நீதிமன்ற  நீதிவான்   ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு   எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் டிசெம்பர் ...

மேலும்..

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு அழைப்பாணை – றோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்குப் பொது மன்னிப்பு வழங்கியமையால் வந்த வினை

றோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்குப் பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக விளக்கமளிக்க, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமன்னிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்ட நிலையிலேயே ...

மேலும்..

அதிகளவு ஆசனங்களை இம்முறை கைப்பற்ற வேண்டும் கூட்டமைப்பு – படிச்ச இளம் ஆட்களுக்கே நாடாளுமன்றத் தேர்தல் வாய்ப்பு என்கிறார் சம்பந்தன்

"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற வேண்டும். படித்த இளையோருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்கவுள்ளோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். . நாடாளுமன்றத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் ...

மேலும்..

சுசிலன் பவுண்டேஷன் நிறுவனம்  அம்பாறை மாவட்ட பாண்டிருப்பு செல்லப்பர் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 32 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்

எமது நாட்டில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனடியாக அவசர உதவியாக எமது நாட்டில் இயங்கி கொண்டு வருகின்ற சுசிலன் பவுண்டேஷன் நிறுவனம் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட பாண்டிருப்பு செல்லப்பர் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் 32 குடும்பங்களுக்கு உலர் ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிப்பு- சபையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளரும் பிரசன்னம்

சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதுடன் சபையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளரும் பிரசன்னமாகியிருந்ததாக உபதவிசாளர் விக்டர் ஜெகன் தெரிவித்தார். பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (09) நடைபெற்ற சபை அமர்வில் ...

மேலும்..

சென்.ஜேம்ஸ் தேவாலய புதிய கட்டடம் திறந்துவைப்பு. முதல்வர் பங்கேற்பு

யாழ்ப்பாணம் சென்.ஜேம்ஸ் தேவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தை  (பணிமனை) திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த (8) இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார். அருட்பணி சாள்ஸ் ஜஸ்ரின் அடிகளார் அவர்களின் சேவைக்காலத்தில் அமைக்கப்பட்ட ...

மேலும்..

32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்

அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று (09) நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர - நீர் வழங்கல் வசதிகள். 02. பேராசிரியர் ரஞ்சித் ...

மேலும்..

ரவிகரன் உள்ளிட்ட ஏழுபேர்மீதான வழக்கு தள்ளுபடி

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்தநிலையில், குறித்த வழக்கு 09.12.2019 இன்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.முல்லைத்தீவு ...

மேலும்..