தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.

பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் சமூக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் ஆகியோர் நகர்த்தல் மனுவை சட்டத்தரணிகளூடாக சமர்ப்பித்தன் பேரில் நீதிமன்றம் குறித்த தடையுத்தரவை நேற்றய தினம் விலக்கியிருந்தது.

இதன் அடிப்படையில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயம் முன்றலில் இன்று காலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைப்பாளர் துஷாந்தன் ஏற்பாட்டில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதான பிரமுகராக கலந்து கொண்டதுடன் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான க.சிவலிங்கம் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதே வேளை ஆலய வளாகத்தில் அதிகளவான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததுடன் உறவுகளை நினைவு கூர்ந்து கஞ்சி வழங்கப்பட்டது.