நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீதையம்மனுக்கான சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் என்பவற்றை தாங்கிய ஊர்தி நேற்று சீதையம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு – மயூராபதி ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்புப் பூஜைகளை தொடர்ந்து தீர்த்த ஊர்தி ஊர்வலமானது கொள்ளுப்பிட்டி இந்திய உயர்ஸ்தானிகரகத்தை சென்றடைந்தது.தொடர்ந்தும் தீர்த்த ஊர்தியானது இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தைச் சென்றடைந்தது.

இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த தீர்த்த ஊர்தியானது நேற்று (18) லபுக்கலை, நுவரெலியா ஊடாக சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

குறித்த ஆலயத்தில் நேற்றைய தினம் எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இந்தநிலையில் இன்றைய தினம் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.