இன்றைய நாள் எப்படி – 23 மே 2024

23/05/2024 வியாழக்கிழமை 

1)மேஷம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .சிலருக்கு பதவி உயர்வு சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். சொந்த தொழில் ஏற்றம் தருவதாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் பொருளாதார உயர்வு காணப்படும்.

2)ரிஷபம் :-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் துறையில் இருந்த தடைகளை உடைத்து முன்னேறுவார்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுவீர்கள்.

3)மிதுனம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .தொழில் செய்பவர்கள் வேலைப்பளு அதிகரிப்பதாக உணர்வீர்கள். வருமானம் அதிகரிப்பதால் கவலைகளை மறப்பீர்கள்.

4)கடகம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பதவி உயர்வு பெற எவ்வளவு முயற்சி செய்தாலும் அது பலன் அளிக்காது. எனவே அன்றாட பணிகளை சரியாக செய்து அதிகாரிகளிடம் நற்பெயர் பெற முயற்சி செய்யுங்கள்.

5)சிம்மம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்கள் வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்ற வாய்ப்பு உண்டு.

6)கன்னி:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதுதான் வளர்ச்சிக்கு நல்லது. சொந்த தொழில் செய்பவர்கள் வேலைப்பளு காரணமாக கொஞ்சம் சோர்வடைய நேரிடும்.

7)துலாம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .உத்தியோகத்தர்களுக்கு அலுவலகம் தொடர்பான விஷயங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சில சலுகைகள் கிடைக்கக்கூடும்.

8)விருச்சிகம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .வருமானம் மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். சொந்த தொழில் செய்பவர்கள் அரசு வழியில் சில நன்மைகளை பெற்று அதன் மூலம் தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள்.

9)தனுசு:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .ஒரு சிலருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள்.

10)மகரம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .உயர் அதிகாரிகளின் மூலம் மறைமுக வருமானம் வந்து சேரலாம். சொந்த தொழில் செய்பவர்களில் சிலருக்கு இதுவரை சந்தித்து வந்த தடைகள் விலகும்.

11)கும்பம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் பதவி உயர்வு போன்றவை கடைசி நேரத்தில் கைகூடி விடும். சொந்த தொழிலில் படிப்படியான வளர்ச்சியையும் திருப்தியான வருமானத்தையும் பெறுவீர்கள்.

12)மீனம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க .உத்தியோகத்தில் இடமாற்றம் பதவி உயர்வு போன்றவற்றை பெறுவதில் தாமதம் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பல வழிகளிலும் தங்கள் துறையில் வளர்ச்சிக்கு உதவிகள் வந்து சேரும்.